திருச்சூர் லாட்ஜில் சிக்கிய 2 பேர் தீவிரவாதிகளா? போலீசார் தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் சந்தேகத்துக்குரிய வகையில் லாட்ஜில் தங்கியிருந்த காஷ்மீர் வாலிபர்கள் 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கேரளாவில் திருச்சூர் ரயில் நிலையம் அருகே உள்ள லாட்ஜில் 2 தினங்களுக்கு முன் 2 வாலிபர்கள் வாடைக்கு அறை எடுத்தனர். அப்போது அவர்கள் காஷ்மீர் முகவரியை கொடுத்தனர். காலையில் வெளியே செல்லும் அவர்கள் இரவுதான் அறைக்கு திரும்புவார்கள். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் திருச்சூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் மதராசா கட்டுவதாகவும், அதற்கு நன்கொடை வசூலிக்க கேரளா வந்ததாகவும் விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பூஞ்ச் மாவட்ட போலீசை திரூச்சூர் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். அங்கிருந்து தகவல் வந்த பிறகே இருவர் மீதான நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications