அதிமுகவின் காக்க வைக்கும் போக்கு-விலகுகிறார் கார்த்திக்?

சரணாலயம் என்ற அமைப்பை நடத்தி வந்தவர் கார்த்திக். அந்த அமைப்புக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து அவரை அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அவரை தனது தமிழக பிரிவுக்குத் தலைவராக்கியது. ஆனால் அவரது போக்கு கட்சியினருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியதால் கட்சியை விட்டு நீக்கி விட்டனர் கார்த்திக்கை.
இதையடுத்து 2009ம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார் கார்த்திக். கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது கார்த்திக் கட்சி. விருதுநகர் மற்றும் தேனி ஆகிய தொகுதிகள் கார்த்திக் கட்சிக்குக் கிடைத்தது. இதில் விருதுநகரில் கார்த்திக்கும், தேனியில் பார்வதி என்பவரும் போட்டியிட்டனர். இதில் இருவருமே டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார் கார்த்திக். தனது கட்சிக்கு 3 தொகுதிகள் தேவை என்றும் கோரினார். ஆனால் அதற்குப் பின்னர் இதுவரை அதிமுகவிடமிருந்து கார்த்திக்குக்கு அழைப்பு வரவில்லை. அதேசமயம், கார்த்திக் கேட்கும் தொகுதிகளைத் தர முடியாது என்றும் அதிமுக தரப்பு கூறி விட்டதாம். சரி, ஒரு தொகுதியாவது தாருங்கள் என்று கார்த்திக் தரப்பில் கேட்டபோது அதற்கும் பதில் வரவில்லையாம். அதாவது கார்த்திக்குக்கு ஒரு சீட் கூட கிடையாதாம். வெறும் ஆதரவு மட்டுமே போதும் என்று கூறி விட்டார்களாம்.
இதனால் கடுப்பாகியுள்ளார் கார்த்திக் என்கிறார்கள். அதிமுக தன்னை மறுபடியும் அழைக்காவிட்டால், தனித்துப் போட்டியிடுவது என்றமுடிவுக்கு அவர் வரப் போகிறாராம்.
அப்பாடா, பாஜகவுக்கு மீண்டும் கூட்டணிக்கு ஆள் கிடைத்தாயிற்று!
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications