கலைஞர் டிவி எம்.டியிடம் டெல்லியில் சிபிஐ விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2 ஜி விவகாரம் தொடர்பாக கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
2 ஜி ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக சிபிஐ கலைஞர் தொலைக்காட்சியில் அதிரடி சோதனை நடத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்த தொலைக்காட்சியின் பங்குதாரர்கள் கனிமொழி எம்பியிடமும், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரரும், நிர்வாக இயக்குனருமான சரத்குமாரிடம் டெல்லியில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
வரும் 31-ம் தேதிக்குள் 2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications