தேர்தல்: திமுகவுக்கு கோவில் பூசாரிகள் சங்கம் ஆதரவு
காஞ்சிபுரம்: வரும் சட்டசபை தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் 33-வது மாவட்ட மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
திருக்கோவில் மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் பசலி என்ற சொல்லுக்கு பதிலாக நிலவரி ஆண்டு, நில வருவாய் ஆண்டு என மாற்றி நடைமுறைப்படுத்த வேண்டும், வறுமை நிலையில் உள்ள பூசாரிகளுக்கு மாதம் ரூ. 500 உதவித்தொகை, குடியுரிமை பட்டா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட வீடுகள் ஆகியவை வழங்க வேண்டும், பூசாரி நலவாரியத்தில் திருமண நிதியுதவியை ரூ. 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஓய்வூதியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது, தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டிற்கு பிறகு சங்க மாநிலத் தலைவர் பி.வாசு கூறியதாவது,
கோவில் பூசாரிகளுக்கு நலவாரியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வருக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியை 6-வது முறையாக தமிழக முதல்வராக்க தமிழ்நாடு கோவில் பூதாரிகள் நலச்சங்கம் பாடுபடும் என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications