நேர்காணலுக்கு அழைக்கப்படாததால் ஜெ. வீட்டுமுன் பெண் வக்கீல் தீக்குளிக்க முயற்சி
சென்னை: நேர்காணலுக்கு அழைக்கப்படாததால் மனமுடைந்த பெண் வழக்கறிஞர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு முன்பு தீக்குளிக்க முயன்றார்.
மதுரையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் லட்சுமி (34). மதுரை பார்கவுன்சில் உறுப்பினரான அவர் ஒரு அதிமுக தொண்டர்.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் சார்பில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தமிழரசியிடம் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். அவர் மதுரை புறநகர் மாவட்ட இணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். வரும் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமைக் கழகத்தில் விருப்பமனு கொடுத்திருந்தார்.
அதிமுகவில் விருப்பமனு கொடுத்த அனைவரையும் நேர்காணலுக்கு அழைக்கவில்லை. தொகுதிக்கு 3 பேர் வீதம் அழைக்கப்பட்டிருந்தனர். சோழவந்தான் தொகுதிக்கான நேர்காணலுக்கு லட்சுமி அழைக்கப்படவில்லை.
தனக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்ககும் என்று நம்பிய அவரால் இந்த ஏமாற்றத்தை தாங்கமுடியவில்லை. இதையடுத்து இன்று காலை அவர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு முன் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.
அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications