ஜப்பானில் 10 கோவை தமிழர்கள்-பத்திரமாக இருப்பதாக தகவல்
Subscribe to Oneindia Tamil
கோவை: பூகம்பத்தால் சிதறுண்டு போயுள்ள ஜப்பானுக்குச் சென்றுள்ள கோவையைச் சேர்ந்த பத்து தமிழக ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
கோவையில் உள்ள பிரிகால் நிறுவனத்தின் உதிரி பாகப் பிரிவில் பணியாற்றி வரும் பத்து ஊழியர்கள் ஜப்பானுக்கு பணி நிமித்தமாக சென்றிருந்தனர். இந்த சமயம் பார்த்து அங்கு பூகம்பமும், தொடர்ந்து சுனாமி தாக்குதலும் ஏற்படவே அவர்களது நிலை குறித்து குடும்பத்தினர் பெரும் கவலையில் மூழ்கினர்.
இந்த நிலையில் தாங்கள் பத்திரமாக இருப்பதாக அவர்கள் தகவல் அனுப்பியுள்ளனர். பத்து பேரும் மத்திய ஜப்பானில் இருப்பதாகவும், அங்கு பூகம்பம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications