தேர்தல்: கோவில்பட்டியில் விடிய விடிய ரோந்து-30 ரவுடிகள் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் போலீசார் விடிய விடிய ரோந்து சென்றனர். அப்போது தேர்தலில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 ரவுடிகளை கைது செய்தனர்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தன. தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வீடியோ கண்காணிப்பு படைகள் மூலம் அனைத்து திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. வன்முறை மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மற்றும் மாஜி குற்றவாளிகளை கைது செய்ய போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோவில்பட்டி டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் இனாம்மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ஜெயகொடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராதாமணி, சுப்பையா மற்றும் போலீசார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டது.
தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவில்பட்டி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ரவுடிகள் காந்திநகர் முருகன், சங்கரலிங்கபுரம் காளிராஜ், காளிபாண்டி, முத்துசாமி, ஞானதேசிகன் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கிய உல்லாச ஜோடி!:
தேர்தலையொட்டி பண வினியோகத்தை தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் அடங்கிய பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்த சோதனையில் இதுவரை 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் நேற்று இரவு நீண்ட நேரமாக கார் ஓன்று நின்றுகொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது காருக்குள் யாரோ இருப்பது உறுதியானது. இதனால் காரின் கண்ணாடியை போலீசார் தட்டினர். இப்போது காருக்குள் இருந்தவாறு வாலிபர் ஒருவர் எட்டிப் பார்த்தார். உடனடியாக அவரை வெளியே வருமாறு போலீசார் அழைத்தனர்.
காரை சுற்றி போலீசார் நிற்பதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். கதவை திறந்து கொண்டு அவர் வெளியே வந்தார். அவர் வெளியே வந்த சில நொடிகளில் காரில் இருந்து இளம்பெண் ஒருவரும் வெளியே வந்தார்.
அவர்கள் இருவரும் இருந்த நிலையை பார்த்ததும் காருக்குள் என்ன நடந்தது என்பதை போலீசார் யூகித்து கொண்டனர். அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது நாங்கள் இருவரும் உறவினர்கள், தற்போது எங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டுவி்ட்டது என்றனர். ஆனால் போலீசார் இதை நம்பவில்லை. இருவரையும் கோட்டார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் இருவரிடம் இருந்து முகவரியை பெற்று அவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டனர். அப்போது இருவரும் உறவினர்கள், நிச்சயிக்கப்பட்டவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications