தேர்தல் பணி-அழகிரி, ஸ்டாலினுடன் மாமல்லபுரத்தில் கருணாநிதி ஆலோசனை

இன்று காலை முதல்வர் கருணாநிதி திடீரென மாமல்லபுரம் கிளம்பிச் சென்றார். அவருடன் அழகிரி, ஸ்டாலின் ஆகியோரும் சென்றனர். இவர்கள் தவிர அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் சென்றுள்ளனர்.
வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிகள், தேர்தல் யுத்திகள் உள்ளிட்டவை குறித்து அழகிரி, ஸ்டாலினுடன் முதல்வர் விவாதித்ததாக தெரிகிறது. அதை விட முக்கியமாக இருவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை குறைவான தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கடும் மோதலால் உள்ளடி வேலைகளில் அவர்கள் ஈடுபடலாம் என்றும் திமுக சந்தேகிக்கிறது. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி முக்கியம் என்பதால் அதற்கேற்ற வகையில் வேட்பாளர் தேர்வு அமையும் என்று தெரிகிறது.
ஸ்டாலினை சந்தித்த யுவராஜா:
இதற்கிடையே தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அப்போது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற இளைஞர் காங்கிரஸார் தீவிரமாக பாடுபட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜா, நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெறும். கலைஞர் 6வது முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்பார். அதற்காக நாங்கள் உழைப்போம். திமுக கூட்டணி வேட்பாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர்கள் என அனைவரும் வெற்றி பெற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications