பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டியைத் தர அதிமுக சம்மதம்
சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களுக்கு உசிலம்பட்டி தொகுதியைத் தர அதிமுக சம்மதித்துள்ளதாக பார்வர்ட் பிளாக் தலைவர் பி.வி.கதிரவன் தெரிவித்துள்ளர்.
அதிமுக கூட்டணியில் பொங்கிக் குமுறிய கூட்டணிக் கட்சிகளில் முதல் கட்சியாக பார்வர்ட் பிளாக் சமாதானத்திற்கு வந்துள்ளது. இந்தக் கட்சிக்கு அதிமுக 1 இடத்தை ஒதுக்கியிருந்தது. உசிலம்பட்டி தொகுதியை தங்களுக்குக் கொடுக்குமாறு கோரியிருந்தது அக்கட்சி.
ஆனால் தடாலடியாக உசிலம்பட்டிக்கு நீதிபதி என்பவரை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் பார்வர்ட் பிளாக் அதிருப்தி அடைந்தது. அதிருப்தியில் இருந்த பிற தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க பார்வர்ட் பிளாக்கும் முயன்றது.
இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுகநடத்தி வரும் ரகசியக் கூட்டத்தில் பார்வர்ட் பிளாக் தலைவர் கதிரவனும் கலந்து கொண்டார்.
தற்போது இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக கதிரவன் தெரிவித்துள்ளார். பிற கட்சிகளுடனும் இணக்கமான முறையில் அதிமுக பேச்சு நடத்தி வருவதாகவும் கதிரவன் கூடுதல் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மூன்றாவது அணி என்ற தோழமைக் கட்சிகளின் மிரட்டலை அதிமுக சமாளித்து விட்டதாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications