திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாததோ, சொல்லாததோ இல்லை: கி.வீரமணி
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாததும், சொல்லாததும் எதுவும் இல்லை. அவ்வளவு அற்புதமாக அமைந்துள்ளது என்று கூட்டணிக் கட்சியினர் கருணாநிதியை பாராட்டியதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னையில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை குறித்து கி.வீரமணி கூறியதாவது,
திமுகவின் பல்வேறு அறிவிப்புகளை அங்கு கூடியிருந்தோரும், தோழமைக் கட்சியனரும் மற்றும் பலரும் கைதட்டி உற்சாகமாக வரவேற்று பாராட்டி மகிழ்ந்தனர்.
சமூகப் புரட்சி, சமதர்மம் பூத்துக் குலுங்கும் திட்டமாக உள்ள தேர்தல் அறிக்கை பற்றி முதல்வரிடம் இதில் இல்லாததும், சொல்லாததும் எதுவும் இல்லை அவ்வளவு அற்புதமாக அமைந்துள்ளது என்று பாராட்டினர் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications