நடிகர் கார்த்திக்கை எதிர்த்து தீவிரப் பிரசாரம் செய்வேன்-நடிகர் செந்தில்
Subscribe to Oneindia Tamil

நடிகர் செந்தில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். ஊட்டி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று கார்த்திக் கூறுகிறார். அவரது கட்சியினர் எங்கு போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்து நான் தீவிரப் பிரசாரம் செய்வேன்.
நான் மட்டுமல்ல, அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக நடிகர்கள் ராதாரவி, ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், சரவணன், சி.ஆர். சரஸ்வதி ஆகியோரும் பிரசாரம் செய்யவுள்ளனர்.
தென் மாவட்டங்களில் யாருக்கு எந்த செல்வாக்கு இருந்தாலும், அதைத் தாண்டி அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார் செந்தில்.
ஒரு காலத்தில் கார்த்திக்கோடு சேர்ந்து செயல்பட்டவர் செந்தில். பின்னர் கார்த்திக்கின் செயல்பாடுகளால் குழப்பமடைந்த அவர் அதிமுகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications