For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: திருச்சுழியில் மூமுக சார்பில் இசக்கி முத்து போட்டி

By Siva
Google Oneindia Tamil News

திருச்சுழி: வரும் சட்டசபை தேர்தலில் மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பில் திருச்சுழி தொகுதியில் இசக்கிமுத்து போட்டியிட உள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில் மூவேந்தர் முன்னணிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.

மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் கடந்த வெள்ளிக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருச்சுழி தொகுதியில் இசக்கி முத்து என்பவர் போட்டியிடுவார் என்று மூமுக நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் அறிவித்துள்ளார்.

English summary
All India Moovendar Munnani Kazhagam is having alliance with ADMK for the assembly election. ADMK has allotted Tiruchuli constituency for it. Party founder N. Sethuraman has announced that Isakki Muthu will contest on behalf of AIMMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X