பாட்சாவுக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் ராஜினாமா நிராகரிப்பு: வலுக்கும் சந்தேகங்கள்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவுக்கு பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவரின் ராஜினாமாவை ஏற்க தமிழக அரசு மறுத்துள்ளது.
2ஜி விவகாரம் தொடர்பாக சிபிஜ அதிகாரிகள் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும், அவரது சொத்துகளின் பாதுகாவலருமாக இருந்த சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்தியது. அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தியது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி சாதிக் பாட்சா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் திடீர் தற்கொலை பல சந்தேகங்களை எழுப்பியது.
இதற்கிடையே அவருக்கு பிரதே பரிசோதனை நடத்திய மருத்துவர் வி. டேகல் கடந்த 3-ம் தேதி திடீர் என்று தன்து பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்க தமிழக சுகாதாரத்துறை இயக்குநரகம் மறுத்துள்ளது. ஆள்பற்றாக்குறை மற்றும் குறுகிய கால அவகாசத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்ற காரணங்களால் டேகலின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டுள்ளது.
தான் வரும் சட்டசபை தேர்தலி்ல் போட்டியிட விரும்பியதால் தான் பதவியை ராஜினாமா செய்ததாகத் தெரிவித்துள்ளார் டேகல். தனது ராஜினாமாவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடக் கோரி அவர் அவர் கடந்த 12-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த விவகாரத்தை அரசிடமே விட்டுவிடுவதாக கடந்த 18-ம் தேதி நீதிமன்றம் கூறியது.
இது குறித்து டேகல் கூறுகையில்,
எனது ராஜினாமாவை நிராகரித்துள்ளது நியாயமற்றது. நான் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பியதால் தான் ராஜினாமா செய்தேன் என்றார்.
இந்நிலையில் அவர் இன்று முதல் வேலையைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் திடீர் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications