வரலாறு காணாத தேர்தல் கெடுபிடி-தமிழகத்திற்கு வரும் 30 வெளிமாநில ஐஜிக்கள்
சென்னை: இதுவரைஇல்லாத அளவுக்கு தமிழக சட்டசபைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகமாகி வருகின்றன. தமிழக தேர்தல் அதிகாரிகளைக் கண்காணிப்பதற்காக 30 வெளி மாநில ஐஜிக்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இவர்கள்ஓரிரு நாட்களில் தமிழகம் வரவுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் கடும் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அமலாக்கி வருகிறது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முதல் பல்வேறு கட்சிகளும் கண்டனம், எதிர்ப்பு, அதிருப்தி தெரிவித்துள்ளன. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் தான் செய்வது சரியே என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக தமிழக தேர்தல் அதிகாரிகளின் பணிகளைக் கண்காணிக்கவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களைக் கண்காணிக்கவும் 30 வெளிமாநில காவல்துறை ஐஜிக்களை தமிழகத்திற்கு அனுப்புகிறது தேர்தல் ஆணையம்.
இவர்கள் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து தேர்தல் ஆணையத்திற்கு அவ்வப்போது அறிக்கை அளிப்பார்கள். தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் இந்த நியமனத்தை செய்துள்ளது தேர்தல் ஆணையம். இவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வரவுள்ளனர்.
ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலத்திற்குரிய ஐஜிக்கள் வந்து விட்டனர். மற்றவர்களும் விரைவில் வரவுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications