அனுதாபம் தேடி வாக்குகளை கவர கருணாநிதி சதி-ஜெயலலிதா
திருவாரூர்: அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனுதாப ஓட்டுக்களைப் பெறுவதற்காக பல்வேறு சதித் திட்டங்களை கருணாநிதி தீட்டி வருகிறார். எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் இன்று அதிமுக வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.
அப்போது அவர் பேசுகையில்,
அ.தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு சதி திட்டங்களில் ஈடுபட இருப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கபட நாடகம் ஆடி அதன் மூலம் அனுதாப ஓட்டுகளை பெற்று விடலாம் என்று வியூகம் வகுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டோ அல்லது தனது மகள் கனிமொழி மீது பொய்யாக ஒரு தாக்குதல் நாடகத்தை நடத்தியோ ஓட்டு வாங்க கருணாநிதி முயல்வார் என்று எனக்குத் தகவல் வந்துள்ளது.
எனவே கருணாநிதியின் கபட நாடகத்தில் ஏமாந்து விடாமல் மக்கள் அ.தி.மு.க., வுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications