தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்செக்ஸ்.. மீண்டும் 19000 புள்ளிகளைத் தொட்டது!
மும்பை: பங்குச் சந்தை மீண்டும் 19000 புள்ளிகளைத் தொட்டு, முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 177.66 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 19,120.80 புள்ளிகளாக நிறைவுற்றது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 49.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 5,770.35 ஆக முடிந்தது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறைப் பங்ககுகள் நல்ல உயர்வு கண்டன.
ஐடி மற்றும் தொலைத் தொடர்புத் துறைப் பங்குகளும் நல்ல விலைக்கு கைமாறின. குறிப்பாக இன்போஸிஸ் நிறுவனத்தின் பங்கொன்று ரூ 32.50 வரை உயர்ந்து கைமாறியது.
இந்தியாவில் புதிய முதலீடுகள் அதிகரிப்பதாலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயர்சி மேற்கொண்டுள்ளதாலும் இந்த நிலை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் இந்த உயர்வைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications