வி.சிறுத்தைகளுக்கு மெழுகுவர்த்தி, கொ.மு.கவுக்கு சிலிண்டர் சின்னம்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னமும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
41 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.கவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிகளைத் தவிர்த்து, இதர தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சைகளுக்கு அந்தச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுயேச்சைகளுக்கு முரசா?-அதிமுக எதிர்ப்பு:
இந் நிலையில் தேமுதிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட முரசு சின்னத்தை அந்தக் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேமுதிக கட்சி இன்னும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் இந்தக் கட்சிக்கு நிரந்தரமான சின்னம் ஏதும் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில் மொத்த தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் கட்சிகளுக்கு குறிப்பிட்ட ஒரு சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி 41 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிக போட்டியிடாத தொகுதிகளில் முரசு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு சுயேச்சைகள் கோரினர். இதை தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுவிட்டது.
இதனால் தேமுதிக போட்டியிடாத, அதிமுக போட்டியிடும் இடங்களில், சுயேச்சைகள் முரசு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். இந்தத் தொகுதிகளில் தேமுதிகவுக்கு ஓட்டு போடுவதாக நினைத்து சுயேச்சைகளுக்கு மக்கள் ஓட்டு போட வாய்ப்புள்ளதால், அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications