கருணாநிதிக்கு ஜெயலலிதா புகழாரம்: கார்த்தி சிதம்பரம்
விருத்தாசலம்: திமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ஜெயலலிதா என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலத்தில் உள்ள காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் திமுக கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது வேட்பாளர் நீதிராஜனை ஆதரித்தது கார்த்தி சிதம்பரம் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மக்களின் தேவைகளை நன்கு அறிந்து கொண்டு கருணாநிதி தேர்தல் அறிக்கை தயாரித்தார். ஆனால் ஜெயலலிதா திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இலவசங்கள் கொடுப்பதை ஏளமானகப் பேசிய அவரே தற்போது இலவசங்கள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசோடு திமுக இணக்கமாக இருப்பதால் மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸும், திமுகவும் சேர்ந்து போட்டியிட்டுள்ளதால் ஹாட்ரிக் கூட்டணி ஆகும். எதிர்க கூட்டணியோ குழப்பமான, முரண்பாடான கூட்டணி. விஜயகாந்த் எங்கு பேசினாலும் ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குவேன் என்று கூறுவதேயில்லை. இதுவே அவர்கள் முரண்பாட்டுக்கு சிறந்த முன்உதாரணம் என்றார்.
கேப்டன் சிப்பாய் ஆகிவிட்டார்
விஜயகாந்த் மீண்டும் விருத்தாசலத்தில் தான் போட்டியிடுவார் என்று நினைத்து நீதிராஜனை இந்த தொகுதி வேட்பாளராக்கினோம். ஆனால் அவர் ரிஷியவந்தியத்திற்கு சென்றுவிட்டார்.
போயஸ் கார்டனுக்கு போகும்போது கேப்டனாக இருந்த அவர், அங்கிருந்து திரும்பி வரும்போது சிப்பாயாக தான் வந்தார். அவர் முதன்முதலாக போட்டியிட்ட இந்த தொகுதியில் தான் புரிந்த சாதனைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டியது தானே? எதற்காக வேறு தொகுதிக்குச் சென்றார்? ஏனென்றால் இங்கு போட்டியிட்டால் நிச்சயம் தோற்றுவிடுவோம் என்று பயம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி விருத்தாசலத்தில் மட்டுமல்ல, ரிஷிவந்தியத்திலும் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications