போட்டி வேட்பாளர்களுக்கு கல்தா: திருமாவளவன் அதிரடி
மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது கட்சி கட்டுப்பாடுகளை மீறி போட்டி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பது கூட்டணி தர்மமாகும்.
ஆனால் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி சிலர் ஒரு சில தொகுதிகளில் போட்டி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
கட்சித் தலைமையின் வேண்டுகோளை ஏற்று அவ்வாறு போட்டி மனுக்களைத் தாக்கல் செய்த சிலர் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் போட்டி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறாத விருத்தாசலம் மருத்துவர் சுலோசனா என்ற சுடர்மதி அய்யாச்சாமி, இராஜன் என்கிற குடந்தை அரசன், சீர்காழி குமாரராஜா, காட்டுமன்னார் கோவில் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களுடன் கட்சியினர் தேர்தல் வேலை செய்யவோ, எந்தவித அரசியல் தொடர்புகள் வைத்துக் கொள்ளவோ கூடாது.
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications