தூத்துக்குடியில் மாமியாரை எரித்துக் கொலை செய்த மருமகன் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாமியாரை எரித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி தங்கஈஸ்வரி (45). இவர்களது மகள் திவ்யா( 24).
இதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் மாரிமுத்துவிற்கும் (32), திவ்யாவுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஆனால் மாரிமுத்துவிற்கும், மாமியார் தங்க ஈஸ்வரியின் உறவினர் பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கணவரைப் பிரிந்து திவ்யா தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.
இந்த நிலையில் மாமியார் வீட்டுக்குச் சென்ற மாரிமுத்து, மனைவி திவ்யாவை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். இதற்கு அவர் வரமறுக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து மாமியார் தங்க ஈஸ்வரியைப் பார்த்து, 'நீ தான் அனைத்திற்கும் காரணம்' எனக் கூறி அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயமடைந்த தங்க ஈஸ்வரி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனையடுத்து மாரிமுத்துவை தென்பாகம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications