சென்ற நிதியாண்டில் மாருதி கார் விற்பனை 25% உயர்வு

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக திகழும் மாருதி நிறுவனம், விற்பனையில் பல புதிய மைல்கற்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மாருதி நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் கார் விற்பனை 25 சதவீதம் உயர்ந்ததாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த நிதியாண்டில் 12,71,005 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டு கார் விற்பனையை (10,18,365 கார்கள்)ஒப்பிடும்போது, 24.81 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
இதேபோன்று, கடந்த மார்ச் மாதம் உள்நாட்டில் 1,10,424 கார்கள் விற்பனையானது. இது, சென்ற ஆண்டு மார்ச் மாத விற்பனையை ( 79,530 கார்கள்) 38.85 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதேவேளை, கடந்த மார்ச் மாத ஏற்றுமதி 26 சதவீதம் சரிவடைந்தது. கடந்த மார்ச்சில் 11,528 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே கடந்த ஆண்டு மார்ச்சில் 15,593 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications