சோனியா, கருணாநிதி பேசும் திமுக கூட்டம்: தீவுத்திடலில் போலீசார் குவிப்பு
சென்னை: தீவுத்திடலில் நாளை மாலை நடக்கும் திமுக பிரசார கூடத்திற்க்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தின் பாதுகாப்பிற்காக மட்டும் ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.
நாளை தீவுத்திடலில் நடக்கும் பிரமாண்ட பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் பேசுகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் அதே மேடையில் பேசுகின்றனர். இந்த கூட்டத்திற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கும்.
கூட்டம் நடக்கும் தீவுத்திடலில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
நாளை காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் சோனியா காந்தி இங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுவைக்கு செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு, மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடல் அருகே சென்னை துறைமுகத்துக்குள் இருக்கும் அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து காரில் தீவுத்திடல் செல்கிறார்.
பிரமாண்ட கூட்டத்தில் பேசிவிட்டு மாலை 6.30 மணி அளவில் மீண்டும் காரில் அடையாறு ஐ.என்.எஸ். தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்றடைகிறார்.
பின்னர் விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்படுகிறார். ஒரு வேளை மாலை 6.30 மணிக்குள் கூட்டத்தை முடிக்க முடியாமல் காலதாமதமாகி விட்டால், சோனியாகாந்தி தீவுத்திடலில் இருந்து காரில் சென்னை விமான நிலையம் செல்வார். அவர் காரில் விமான நிலையம் செல்லும் பாதையில், வழி நெடுக போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications