உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 3 கோடி பரிசு-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார். முன்னதாக, உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளதால், இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிகிறது என்று கூறியிருந்தார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மத்திய அமைச்சர் சரத் பவாருக்கு வாழ்த்து தந்தி அனுப்பியுள்ளார். அதில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் உலக கோப்பையை வென்ற செய்தியை கேள்விபட்டதும் எனது இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிகிறது. உலக விளையாட்டு அரங்கில் இந்தியா மிக முக்கியமான சக்தி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மும்பையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க, மறக்க முடியாத மகிழ்ச்சியை உண்டு பண்ணியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஒட்டுமொத்த தேசத்தின் பாராட்டையும் பெற முழு தகுதி பெற்றவர். உலக கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+