குடிமகன்களை குஷிப்படுத்த 'பிரிட்டிஷ் எம்பயர்'!!

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள உயர்ந்த ரக மது இதுவே என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
2009-ல் அனுமதி பெற்ற மதுபான தயாரிப்பு நிறவனம் எஸ்என்ஜெ டிஸ்டில்லரீஸ். தமிழகத்தைச் சேர்ந்த என் ஜெயமுருகனுக்குச் சொந்தமான இந்த நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
தமிழகம் தவிர, கோவா, கேரளா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பாண்டிச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளார் ஜெயமுருகன்.
லாட்டரி, சினிமா, சமூக நலப் பணிகள் என இவரது எல்லைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகின்றன.
தனது எஸ்என்ஜெ நிறுவனத்திலிருந்து இப்போது பிரிமியம் பிராந்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் எம்பையர் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பிராந்திதான் இந்தியாவில் தயாராகும் மது வகைகளில் காஸ்ட்லி மற்றும் உயர்வான தயாரிப்பு என்று அவர் நேற்று தெரிவித்தார்.
இந்த பிராந்தியை, பிரபலமான கோனியாக் மது தயாரிப்பாளர்களின் அங்காரம் பெற்ற லூயி ராயர் நிறுவனத்தின் ஆலோசனையுடன் எஸ்என்ஜெ நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன் அறிமுக விழாவில் பங்கேற்றுப் பேசிய எஸ் என் ஜெயமுருகன், "இந்தியாவில் தயாராகும் மற்றெல்லா பிராண்டுகளையும் விட விலையில் மட்டுமல்ல, தரத்திலும் உயர்ந்தது இந்த பிரிட்டிஷ் எம்பயர்தான்" என்றார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்துக் கேட்டபோது, "முதலில் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப் போகிறோம்," என்றார்.
எஸ்என்ஜெ நிறுவனம் தமிழகத்தின் மது தேவையில் 15 சதவீதத்தை நிறைவேற்றுமளவு முக்கிய நிறுவனமாகத் திகழ்கிறது. மாதம் ஒன்றுக்கு 6 லட்சம் கேஸ்கள் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், வரும் ஆண்டுகளில் கோனியாக் பிராந்திக்கு இணையாக, 100 சதவீதம் கிரேப்ஸ் ஸ்பிரிட்டில் தயாராகும் மதுபான வகைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
100 சதவீத கிரேப் ஸ்பிரிட் மது வகை இந்தியாவில் தயாராவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications