என் புகாருக்கு என்ன பதில்? - தேர்தல் ஆணையத்துக்கு கார்த்திக் கேள்வி

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவரான நடிகர் கார்த்திக் மதுரையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 29-ந் தேதி எங்கள் கட்சி வேட்பாளர்கள் 3 பேரை சென்னையில் இருந்து அ.தி.மு.க.வினர் காரில் கடத்தி வந்துள்ளனர். போட்டியில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிக்கும்படி மிரட்டியுள்ளனர்.
உசிலம்பட்டி தொகுதியின் எங்கள் கட்சி வேட்பாளர் அதற்கு மறுத்த நிலையில் அவரை திண்டுக்கல் அருகே நடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் போலீசாருக்கும் நான் புகார் கொடுத்துள்ளேன். அ.தி.மு.க. கூட்டணியை நம்பி நான் மோசம் போய் விட்டேன். அதனால் தனித்து போட்டியிட முடிவு செய்தோம். ஆனால் இப்போது எங்கள் கட்சி வேட்பாளர்களை பணம் கொடுத்து மிரட்டி தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளும் படி கூறுகிறார்கள்.
இதற்கிடையே எங்கள் கட்சியின் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் வேட்பாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிலர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டி வருகிறார்கள். (பதிவு செய்யப்பட்ட செல்போன் பேச்சைக் காட்டினார்). இதையெல்லாம் பார்க்கும் போது இந்த தேர்தல் முறையாக நடக்கிறதா என்று சந்தேகம் வருகிறது.
உண்ணாவிரதம்...
எங்கள் கட்சி இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எங்களை பிரசாரத்தில் ஈடுபடவும் முடியாமல் தடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே நான் அறிவித்த 27 வேட்பாளர்களில் தற்போது 18 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதற்கு அ.தி.மு.க.வின் மிரட்டல் தான் காரணம். அவர்களிடம் பணம் மற்றும் ஆள்பலம் உள்ளது. அதனால் இது போல செய்கிறார்கள்.
இந்த மிரட்டல் தொடர்பாக நான் சென்னை சென்று தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய உள்ளேன். அவர்கள் முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் வேட்பாளர்களுடன் மதுரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன். எங்களுக்கு தி.மு.க. எதிரி அல்ல. அதனால் எங்கள் வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்போம்," என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications