விக்கிரவாண்டி பஞ்சாயத்துத் தலைவர் கொலை-'தேர்தல் தள்ளி வைக்கப்படாது'
சென்னை : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பேரூராட்சித் தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிராகரித்து விட்டார்.
விக்கிரவாண்டியில் பேரூராட்சித் தலைவர் அர்ஜூனன் என்பவர் இன்று படுகொலை செய்யப்பட்டார். இதனால் விக்கிரவாண்டியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 ஆயுதம் தாங்கிய போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் மூளாமல் இருக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இங்கு நாளை நடைபெறவுள்ள தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி விக்கிரவாண்டி சென்று நேரில் ஆய்வு செய்தார்.
இதற்கிடையே, திமுகவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில், ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்தால் மட்டுமே தேர்தலை தள்ளி வைக்க சட்டத்தில் இடமுள்ளது.
தற்போது விக்கிரவாண்டியில் பஞ்சாயத்துத் தலைவர் இறந்துள்ளதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்றார் அவர்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications