கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் மண்டை உடைந்தது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள அமைச்சர் சுரேந்திரன் பிள்ளை தனது தொகுதியில் பிரசாரம் செய்கையில் ஏற்பட்ட மோதலில் அவரது மண்டை உடைந்தது.

கேரள அமைச்சர் சுரேந்திரன் பிள்ளை நேற்று தனது தொகுதியான திருவனந்தபுரத்தில் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார். பூதுரா என்ற இடத்தில் அவர் பிரசாரம் செய்து கொண்டிருக்கையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் கையாலும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். அப்போது ஒரு கல் அமைச்சர் சுரேந்திரன் பிள்ளையின் தலையில் பட்டது. இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

முன்னதாக இதே பகுதியில் மத்திய அமைச்சரப் ஏ.கே. அந்தோணி பிரசாரம் செய்கையிலும் அவரை பிரசாரம் செய்யவிடாமல் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இடையூறு செய்தனர். இதனால் மோதல் ஏற்பட்டது. அதேபோல காயம்குணம், கருணாகப்பிளி, பிரிதலமனா, கைபிமங்கலம் ஆகிய இடங்களிலும் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+