திருப்பூரில் பஸ்கள் திடீர் நிறுத்தம்: வாக்காளர்கள் அதிருப்தி-போலீசார் குவிப்பு
திருப்பூர்: திருப்பூரில் நேற்றிரவு 12 மணி முதல் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகள் முன்னறிவிப்பு எதுவும் இன்றி திடீர் என்று நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர்.
திருப்பூரில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பதற்காக அதிகாலை 3 மணி முதல் பேருந்து நிலையத்தில் குவியத் துவங்கினர்.
அங்கு சென்ற பிறகு தான் நேற்றிரவு 12 மணி முதல் திருப்பூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் மக்கள் எரிச்சலடைந்தனர்.
நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமானது. பேருந்துகள் செல்லாததால் சுமார் 200 முதல் 300 பேர் திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் திருப்பூர் பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications