மீனவர் படுகொலை தொடர்ந்தால் இளைஞர்களை திரட்டி கடும் போராட்டம்-வைகோ எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடருமானால் இளைஞர்களைத் திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்த நேரிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

இது குறித்து மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2.4.2011 அன்று ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விக்டஸ், அந்தோணி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் காணாமல் போயினர். இத்தகவலை அறிந்த வைகோ, கடந்த 5.4.2011 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களைக் காப்பாற்றிடக் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள் நால்வரும், இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விக்டஸ் என்பவரது சடலம் மட்டும் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

எஞ்சிய இரு மீனவர்களின் சடலங்கள் தொண்டி அருகே இலங்கைக் கடற்படையால் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மற்றொருவர் குறித்துத் தகவல் இல்லை. இறந்த மீனவர் ஒருவரின் கை, வெட்டித் துண்டிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ராமேஸ்வரம் சென்று, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார். வைகோவைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் கதறி அழுதனர். வைகோ குழந்தைகளை ஆற்றுப்படுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

"உங்களின் தாங்க முடியாத துக்கத்திலும், கண்ணீரிலும் பங்கு கொள்வதற்காகவே நான் வந்துள்ளேன். நான்கு மீனவர்களைக் கொன்றது, இலங்கைக் கடற்படையினர் தான். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்குவதுடன், தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் மத்திய-மாநில அரசுகள் கருதுகின்றன. மீனவர் படுகொலை தொடருமானால், இளைஞர்களைத் திரட்டி, கடுமையான போராட்டத்தை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்" என அவர்களிடம் வைகோ கூறினார்.

மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு மதிமுக சார்பில் தலா ரூ. 25,000 உதவித் தொகை வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+