மதுரை பொறியியல் மாணவி கொலையில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
மதுரை: மதுரையில் பொறியியல் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளத் தொடர்பால் இந்தக் கொலை நடந்துள்ளது.
மதுரை வில்லாபுரம் சொக்கலிங்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்த மாயாண்டி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களது மகள்கள் கயல்விழி (19), சித்திரைச் செல்வி (18). சித்திரைச் செல்வி என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந் நிலையில் லதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை முத்துராமலிங்கத்தின் மனைவி நாகஜோதி கண்டித்துள்ளார். இருந்தாலும் லதா- முத்துராமலிங்கம் தொடர்பு நீடித்தது.
இந் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை லதாவின் வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்மக் கும்பல், லதா மற்றும் அவரது மகள்கள் கயல்விழி, சித்திரைச் செல்வி ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிவிட்டது. இதில் சித்திரைச் செல்வி அதே இடத்தில் பலியானார்.
லதாவும் கயல்விழியும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் முத்துராமலிங்கத்தின் மனைவி நாகஜோதிதான் கூலிப்படை வைத்து இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவந்தது. ஆனால், நாகஜோதி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரைப் பிடிக்க ஒரு தனிப் படையும் கூலிபடையினரைப் பிடிக்க ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி மதுரையில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த நாகஜோதியை கைது செய்தனர். அவரது கணவர் முத்துராமலிங்கம், நாகஜோதியின் தங்கை விஜயராணி, இவரது கணவர் காமராஜ், மகன் வழிவிட்டான் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications