கொலை நகரமாகும் மதுரை: மக்கள் பீதி
மதுரை: மதுரையில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால் அங்குள்ள பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள உச்சபரம்பு என்னும் இடத்தில் டீக்கடை வைத்திருந்தவர் மணிகண்டவேலன் (17). நேற்று கள்ளழகர் திருவிழா நடந்ததால் அவர் கடையை திறக்கவில்லை.
அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் மணிகண்டவேலனின் டீக்கடைக்குள் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த அவர் கடைக்குச் சென்று அங்கு குடிபோதையில் இருந்தவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மணிகண்டவேலனை சரமாரியாக வெட்டியது. இதைப் பார்த்து தடுக்க வந்த துணி தேய்க்கும் தொழிலாளி விஸ்வநாதனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்தனர்.
இது குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உச்சிபரம்பைச் சேர்ந்த மணிகண்டன் (18), ராமு (27), மணி (23), வீரமணி (20), ரமேஷ் (28), சவுந்தர் (24) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதில் மணியும், வீரமணியும் சகோதரர்கள். கைதான 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் ஒரு கொலை:
மதுரை துவரிமான் களத்துமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (37). டிரைவர். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடித்துவிட்ட தனது நண்பர்களுடன் தகராறு செய்துள்ளார். இதில் சுந்தர் அரிவாளால் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரன் (19) என்பவரை கைது செய்தனர்.
மேலும் ராமு உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள். மதுரையில் அடிக்கடி கொலைச் சம்பவம் நடப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications