மே 25-ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்! - அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ப்ளஸ்டூ அரசு பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிவடைந்தது. 7 லட்சத்து 74 ஆயிரத்து 205 மாணவ- மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். தனியாக 57 ஆயிரத்து 56 பேர் எழுதினார்கள். மொத்தம் 1,890 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒ.எஸ்.எல்.சி. தேர்வை 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். தனியாக 97 ஆயிரத்து 655 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி நடந்து முடிந்து விட்டது.
மார்க் பட்டியல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முடிவுகள் வரும் மே 14-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது எஸ்.எஸ். எல்.சி. தேர்வு தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் மே 25-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று வெளியிட்டார்.
உலக புத்தக தினம் விழா சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான 2 நாட்கள் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று தொடங்கி வைத்தார்.
அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டனர். அதற்கு சபீதா பதில் அளிக்கையில், "பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 14-ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25-ந்தேதி வெளியிடப்படும். பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டன.
எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தேர்வு முடிவுகள் அரசு சார்பில் பள்ளிக்கல்வி இணைய தளத்தில் மட்டும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் மாணவர்கள் முடிவை பார்க்க முயற்சிக்கும்போது, அது முடங்கி விடுகிறது.
தேர்வு முடிவை உடனே அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். மாணவர்கள்-பெற்றோரின் சிரமத்தை தவிர்க்க கூடுதலாக மேலும் சில இணைய தளங்களில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட பரிசீலனை செய்து வருகிறோம்", என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications