கொடியவன் ராஜபக்சே கூட்டம் அழியும்! - வைகோ

Subscribe to Oneindia Tamil

கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, இந்த ஈஸ்டர் திருநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தி:

கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒரு நாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் நாள் வழங்குகிறது.

மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடி துடித்து வாடும் ஈழத் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும். விடியல் உதிக்கும், கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத் தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க் குலம் உறுதி எடுக்கட்டும்.

-இவ்வாறு வைகோ ஈஸ்டர் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+