முழுமையான குற்றப்பத்திரிகை நகலை சிபிஐ தரவில்லை: ராசா புகார்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தனக்கு குற்றப்பத்திரிகையின் முழுமையான நகல் தரப்படவில்லை என்று புகார் கூறியுள்ளார். இதையடுத்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை முழுமையாக வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக ராசா தவிர யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் சாஹித் உஸ்மான் பால்வா ஆகியோரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல்களை அவர்களுக்கு முழுமையாக வழங்குமாறு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராசா உள்ளிட்ட மூவருக்கும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை முழுமையாக வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ உறுதி அளித்தது.
மேலும், அவர்கள் மூவரின் சிறைக் காவலும் ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள 2வது துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications