ஐ.நா. அறிக்கையை வெளியிடவிடாமல் இந்தியா தடுப்பதாக சந்தேகம்: தொ. பரமசிவம்
நெல்லை: இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.சபையின் அறிக்கையை வெளியிடவிடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் தொ. பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது,
இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு. எனவே மத்திய அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இலங்கை தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா. தயார் செய்துள்ள அறிக்கையை வெளியிட கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று இலங்கை காலில் விழுந்து கெஞ்சுகிறது. ஆனால் இலங்கையின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துவிட்டது. இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்த அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கையை வெளியிடாமல் தடுக்க இந்தியாவும் துணை போகின்றதோ என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். ஐ.நா. அறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும். இது தான் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பில் இன்று (ஏப்ரல் 24 ) பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரன், இலங்கை தமிழர் பகுதிக்கு நேரடியாக சென்று வந்த வழக்கறிஞர் கயல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் சேவியர், மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நிஜாம், வக்கீல் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications