காரில் கடத்தப்பட்ட பெண்-மோட்டார் சைக்கிள்களில் 40 கி.மீ. விரட்டி பிடித்த மக்கள்
சிவகங்கை: மதுரை அருகே கீழவளவில் காரில் இளம்பெண்ணை கடத்திச் சென்ற கும்பலை 100க்கும் அதிகமானோர் ஏராளமான மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்ற பொது மக்கள் மடக்கிப் பிடித்து பெண்ணை மீட்டனர்.
மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள உறங்கான்பட்டியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் காய்கறி வாங்குவதற்காக சந்தைக்கு சென்றார். அப்போது, அந்த வழியே காரில் வந்த 4 பேர் அந்தப் பெண்ணை காரில் இழுத்துப் போட்டுக் கொண்டு தப்பினர்.
இந்த சம்பவத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 100 பேர் மோட்டார் சைக்கிள்களில் காரை விரட்டிச் சென்றனர். மேலும் கீழவளவு, சிவகங்கை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
அந்தக் கார் கல்லாராகினிபட்டி என்ற இடத்தில் குறுக்கே வந்த ஆடுகள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. சுமார் 40 கிமீ தூரம் விரட்டப்பட்ட நிலையில் அந்த கார் சிவகங்கை நகருக்குள் நுழைந்தது.
தங்களுக்குக் கிடைத்த தகவலால் உஷாரான சிவகங்கை நகர போலீசார் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே அந்தக் காரை மடக்கினர். அதில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்த பாலுச்சாமி ( 27), ஒக்கூரை சேர்ந்த முருகன் (27), பாலகிருஷ்ணன் (27) என்பதும், காரை ஓட்டி வந்தது ஆனந்தன் (32) என்பதும் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications