வாயில் பீரை ஊற்றி வலுக்கட்டாயமாக மாணவி கற்பழிப்பு-3 பேர் கைது
புதுச்சேரி: 16 வயது மாணவியின் வாயில் பீரை ஊற்றி அவரை கட்டாயப்படுத்தி கற்பழித்த கொடுமை புதுவையில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தர்மாபுரி பகுதியைச் சேர்ந்தவர் கலா. 16 வயதான இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். கலாவின் தந்தை தனியாக வசித்து வருகிறார்.
கலாவுடன், கார்த்தி என்பவர் நெருக்கமாக பழகி வந்தார். இவர் டிரைவராக இருக்கிறார். கடந்த 11ம் தேதி கலா கம்ப்யூட்டர் பயிற்சிக்காக போய் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தி, தனது தாயார் கலாவைப் பார்க்க விரும்புவதாக கூறி வீட்டுக்கு அழைத்தார்.
இதையடுத்து கலாவும், கார்த்தியுடன் அவரது வீட்டுக்குச் சென்றார். ஆனால் அங்கு கார்த்தியின் நண்பர்களான முத்து, அன்பரசன் ஆகியோர்தான் இருந்தனர். கார்த்தியின் தாயார் இல்லை. முத்து கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இதனால் குழம்பினார் கலா. இந்த நிலையில், திடீரென கலாவைப் பிடித்துக் கொண்ட 3 பேரும் அவரது வாயில் பீரை ஊற்றினர். பின்னர் அவரைக் கட்டாயப்படுத்திக் கற்பழித்து விட்டனர். இதை செல்போனில் படமும் எடுத்தனர்.
அதிர்ச்சி அடைந்த கலா நடந்ததை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தார். பெரும் வேதனையில் மூழ்கினார். சோகமமாக காணப்பட்டார். ஆனால் கார்த்தியோ, செல்போனில் கற்பழிப்பை படம் எடுத்ததைக் காட்டிக் காட்டி தனது இச்சைக்குப் பணியுமாறு மிரட்ட ஆரம்பித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலா, தனது தாயாரிடம் இதுகுறித்துக் கூறினார். பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி கார்த்தி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications