நெல்லையில் 7 துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை: சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு
நெல்லை: நெல்லையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாலிபர் உடல் சாக்கில் கட்டப்பட்டு கிணற்றில் மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு,
நெல்லை தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை கிராமத்து வயல் பகுதியில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றில் இருந்து நேற்று காலை துர் நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்றவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தனர். உள்ளே ஒரு சாக்கு மூட்டை மிதந்தது. இது குறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கயிறு கட்டி அந்த சாக்கு மூட்டையை மேலே கொண்டு வந்தனர். அதை அவிழ்த்துப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தது தெரிய வந்தது.
அவரது தலை தனியாகவும், இரண்டு கைகள் தனியாகவும், வயிற்றுப்பகுதி, இரண்டு கால்கள் தனியாகவும் என மொத்தம் 7 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டைக்குள் அடைத்து அதனுடன் கல்லையும் சேர்த்து கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். இந்த கொடூர கொலை நடந்து 3 நாட்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் உடல் அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீசியது. முகம் அடையாளம் தெரியாதபடி அழுகி சிதைந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட வாலிபரின் சட்டைப் பையில் 2 ரூ. 500 நோட்டுகள் மட்டும் இருந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. அது கிணறு மற்றும் நெடுஞ்சாலை பகுதியை சுற்றி சுற்றி வந்தது. இதனால் கொலை வெளியூரில் செய்து பிணத்தை காரில் எடுத்து வந்து கிணற்றில் வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications