பிளஸ் டூ ரிசல்ட் தேதி மாற்றம்!-மே 9ம் தேதி வெளியாகும்

தேர்வு முடிவுகளை இணையத் தளங்களிலும் எஸ்எம்எஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பத்தம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மே 14ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்திருந்தார். இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 25ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.
மே 13ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், அடுத்த நாளே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாவது குழப்பமான நிலையை உருவாக்கும் என பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து கல்வித்துறை செயலாளர் சபீதா தன்னுடனோ அரசிடமோ ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையான முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.
வழக்கமாக கல்வித்துறை அதிகாரிகள், செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி, அதன்பிறகு முதலமைச்சரின் ஒப்புதல் பெற்ற பிறகே பிளஸ் தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் திமுக அரசு காபந்து அரசு தான் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சபீதா தானாகவே தேதியை அறிவித்தார். அவர் மீது ஜெயலலிதா ஆதரவாளர் என்ற புகாரும் கூறப்பட்டு வருகிறது.
விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுவதாக ஏற்கனவே பேச்சு உள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வரும் பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி சபீதா உள்ளிட்ட சில அதிகாரிகள் சிலர் தன்னிச்சையாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் முன்னதாகவே தேர்வு முடிவு வெளியாகிறது.
இந் நிலையில் மே 9ம் தேதியே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைபச்சர் தங்கம் தென்னரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் 9ம் தேதி (திங்கட்கிழமை) காலை வெளியிடப்படும். தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசு தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளங்கள், எஸ்.எம்.எஸ்., தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் பணி முடிவடைந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications