வெளிநாடுவாழ் இந்தியர் அமைச்சக தலைமையகம் கட்டும்பணி துவக்கம்: அமைச்சர் வயலார் ரவி
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சகத்திற்கான தலைமை அலுவலகத்தின் கட்டுமானப் பணியை மத்திய வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று டெல்லியில் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
இந்த தலைமை அலுவலகம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும். இந்த அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும். இதற்கு நிதி ஒரு பிரச்சனை இல்லை. இந்த அலுவலகம் வெளிவாழ் இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து வசதிகள் கொண்டதாக இருக்கும். இதில் நூலகம், கருத்தரங்குக் கூடங்கள், விருந்தினர் விடுதி, நிரந்தர கண்காட்சிக் கூடம், விற்பனை மையங்கள் போன்றவை மிக நவீனமான முறையில் அமைக்கப்படும்.
இந்த கட்டடத்தைக் கட்டும்பணி தேசிய கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தலைமைக் கட்டிடம் கட்டப்படும் என்று கடந்த 2004-ம் ஆண்டே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தலைமையகம் சுமார் ரூ. 80 கோடி செலவில் கட்டப்படவிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். தற்போது கட்டுமானப் பணி துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த தலைமையகம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications