கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!
கோவை: கோவையில் கூடுதல் எஸ்.பி வீட்டில் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் திருட்டு போயுள்ளது.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணிபுரிந்து வருகிறார் முத்துசாமி. இவர் தனது குடும்பத்துடன் கோவை காந்திபுரம் அருகேயுள்ள நியூசித்தாபுதூரில் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள உறவினரைச் சந்திக்க வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று முத்துச்சாமி வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறைக்கும், முத்துச்சாமிக்கும் தகவல் கொடுத்தனர். அவரது வீட்டிலுள்ள 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு நகைகளும், பணமும் திருட்டு போயுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எப்போதும் பரபரப்பான பகுதியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரி வீட்டிலேயே நடைபெற்ற இந்த திருட்டு அந்தப் பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications