தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கப்படுவது நிச்சயம்-எஸ்.வி.சேகர்
காரைக்குடி: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு நிச்சயம் நீக்கப்படுவார். அதில் சந்தேகம் இல்லை. தேர்தல் முடிவுக்குப் பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்றும் நடிகரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.வி.சேகர். ஆனால் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். இருந்தாலும் எம்.எல்.ஏ. பதவியிலிரும் விடாமல் நீடித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தனக்கு மயிலாப்பூர் தொகுதி தரப்படும் என நம்பியிருந்தார் சேகர். ஆனால் படு கில்லாடியாக செயல்பட்டு தானே அங்கு வேட்பாளராக போட்டியிட்டார் தங்கபாலு. இதனால் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்பட அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். இதை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக அத்தனை பேரையும் கூண்டோடு நீக்கி மேலும் அதிர்ச்சியூட்டினார் தங்கபாலு.
இவரது மகன் அஸ்வின் சேகருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதற்கான அழைப்பிதழை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கொடுப்பதற்காக காரைக்குடிக்கு வந்தார் எஸ்.வி.சேகர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நடந்த முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இந்த தேர்தல் எதிர்ப்பலைகள் இல்லாத தேர்தல். அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் பரவலாக சென்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு உள்ள ஒரு மாத இடைவெளி வேட்பாளர்கள் தங்களது மனதை பக்குவப்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 63 தொகுதிகளை போராடி பெற்றனர். ஆனால் தங்கபாலு வேட்பாளர்கள் தேர்வு மூலம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை அழித்து விட்டார். தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் உண்மை விசுவாசிகள் 19 பேரை நீக்கம் செய்து அறிவித்தார்.
தற்போது இடைநீக்கம் என்று கூறுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி.
அரசியல் வியாபாரம் அல்ல. அரசியல் மூலம் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளை அதிகப்படுத்த விரும்பினேன். எதிராளிகளை சம்பாதிக்க அல்ல. சமூக சேவையில் ஈடுபட அரசியல் பதவி பயன்பட்டது. மயிலாப்பூர் தொகுதியில் ரூ.330 கோடி செலவில் அரசின் நலத்திட்டங்களை செய்துள்ளேன்.
இதில் ஒரு பைசா கூட கமிஷனாக பெறவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை கொடுக்க உள்ளேன் என்றார் எஸ்.வி.சேகர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications