அப்போத்தாபாத்தில் லேடன் பதுங்கியிருந்தது தெரியாது-பாக். அரசு
இஸ்லாமாபாத்: அப்போத்தாபாத்தில் பின்லேடன் பதுங்கியிருந்தது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாது. இதுகுறித்து அமெரிக்க அரசு எங்களுக்குத் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது பாகிஸ்தான் அரசு. இந்த நிலையில் பல மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அது ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்தி:
ஒசாமா பின்லேடனைக் கொன்ற நடவடிக்ககளை அமெரிக்க படைகளை முழுமையாக செய்து முடித்துள்ளன. அமெரிக்க கொள்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அப்போத்தாபாத் நகரில், திங்கள்கிழமை காலை பின்லேடன் கொல்லப்பட்டார். உளவுப் பிரிவு தகவல்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகில் எங்கு பின்லேடனைப் பார்த்தாலும் அமெரிக்கப் படைகள் அவரை நேரடியாக கொல்லும் என்று அமெரிக்க அரசு எடுத்துள்ள கொள்கையின் அடிப்படையில் இது நடந்துள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பின்லேடன் வெற்றிகரமாக கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பாகி்ஸ்தான் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாத செயல்களுக்கோ, புகலிடமாகவோ செயல்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.
பின்லேடன் அப்போத்தாபாத்திற்கு எப்படி வந்தார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து எங்களுக்குத் தெரியாது. அதுகுறித்த புலனாய்வுத் தகவல்களை அமெரிக்கா எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications