மே 9ம் தேதி பிளஸ் 2 முடிவுகள்-25ல் மதிப்பெண் சான்றிதழ்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியாகும் நிலையில், மதிப்பெண் சான்றிதழ் மே 25ம் தேதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, டேட்டா சென்டர்களில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கும் பணி தொடங்கும். இந்தப் பணி பத்து நாள்களுக்கு மேல் நடைபெறும்.
இதையடுத்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு மே 25ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வு முடிவுகள் 9ம் தேதி காலை தட்ஸ்தமிழ் மற்றும் ஒன் இந்தியா (www.oneindia.com) இணையத் தளங்களில் வெளியாகும்.
முன்னதாக பிளஸ் டூ தேர்வு முடிவு மே 14ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபீதா அறிவித்தார். ஆனால், அவரது அறிவிப்பு தன்னிச்சையானது என்று கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
சபீதா முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திருமணததையும் ஜெயலலிதா தான் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications