பரபரப்பான சூழ்நிலையில் கருணாநிதி-தங்கபாலு சந்திப்பு

இந்தச் சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு,
முதல்வரை வழக்கமாக மரியாதை நிமித்தமாகச் சந்திப்பேன். அந்த அடிப்படையில் தான் இன்றைக்கும் சந்திருக்கிறேன். நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக பணியாற்றியது, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கியுள்ள திட்டங்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் திருப்திகரமான முறையில் அமலாக்கப்பட்டுள்ளன.
ஆகவே தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆற்றி வரும் பணிகளுக்கும், மத்தியில் அன்னை சோனியா காந்தி வழி காட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆற்றி வரும் அரும் பணிகளுக்கும் தமிழக மக்கள் சிறந்த பரிசாக வெற்றியைக் கொடுப்பார்கள்.
அரசின் சாதனைகளுக்காக தமிழக மக்கள் வாக்களித்திருப்பது மிகச் சிறந்த பாக்கியம், தமிழக முதல்வராக கலைஞர் 6வது முறையாக பதவியேற்பார் என்றார்.
கேள்வி: சமீபத்தில் வெளியான ஒரு கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே?. தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் போது, கூட்டணி அரசு அமைத்தால், அதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா?
தங்கபாலு: எங்களுடைய முக்கியமான குறிக்கோள் தமிழகத்தில் மீண்டும் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்பது தான். அது தான் எங்களுடைய வேண்டுகோள். அதற்குத் தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மற்ற விஷயங்களைப் பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications