அடிகளாசிரியருக்கு 'தொல்காப்பியர்' விருது-ஜார்ஜ் ஹார்ட்க்கு 'குறள்பீட' விருது: ஜனாதிபதி வழங்கினார்
டெல்லி: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட பின் தமிழ் அறிஞர்களுக்கு முதல் முறையாக மத்திய அரசு விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இந்த விருதுகளை வழங்கினார்.
தமிழ் மொழியை, செம்மொழி என்று பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதுவரை சமஸ்கிருதம், பாலி, ப்ராக்ருதம், அராபிக், பாரசீகம் ஆகிய மொழி அறிஞர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
2005-06, 2006-07 மற்றும் 2007-08ம் ஆண்டுகளுக்கான தமிழ் அறிஞர்கள் விருது வழங்கும் விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. தலா ரூ.5 லட்சம் சிறப்பு பரிசுடன் தொல்காப்பியர் விருது, குறள்பீட விருதுகளும், தலா ரூ.1 லட்சம் சிறப்பு பரிசுடன் இளம் அறிஞர் விருதுகளும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்கினார். மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் விழாவில் பங்கேற்றார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 102 வயதான பேராசிரியர் அடிகளாசிரியர், தொல்காப்பியர் விருதும் (2005-06), அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் குறள்பீட விருதும் (2006-07) பெற்றனர்.
ஆர்.அரவிந்தன் (விழுப்புரம்), ஒய்.மணிகண்டன் (தஞ்சை), எஸ்.கலைமகள் (தஞ்சை), வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் (ராமநாதபுரம்), கே.பழனிவேலு (புதுவை), எஸ்.சந்திரா (மதுரை), அரங்க.பாரி (அரியலூர்), மு.இளங்கோவன் (அரியலூர்), எம்.பவானி (திருவாரூர்), ஆர்.கலைவாணி (நாகை), ஏ.செல்வராசு, பி.வேல்முருகன், ஏ.மணவழகன், எஸ்.சந்திரசேகரன், சிமோன் ஜான் ஆகிய 15 பேர் இளம் அறிஞர்கள் விருதைப் பெற்றனர்.
மேலும் வட மொழிகளைச் சேர்ந்த 51 அறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications