ஆன்லைனில் பள்ளிகள் மூலம் கல்வித் தகுதி பதியலாம்
சென்னை: இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்கள் தங்கள் மதிப்பெண்களை பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச் செல்லத் தேவையில்லை. அவரவர் பள்ளிகள் மூலமே ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்த ஆண்டு பிளஸ் டூ-வில் தேர்ச்சி அடைந்துள்ளவர்கள் தங்கள் கல்வித் தகுதியை அவரவர் பயின்ற பள்ளிகளின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழை வாங்கச் செல்லும் மாணவ-மாணவியர் தங்களது குடும்ப அட்டையை எடுத்துச் செல்லவும். அதில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
10-ம் வகுப்பு கல்வித் தகுதியை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளவர்கள் அதற்கான அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும்.
தற்போது புதிதாகப் பதிவு செய்பவர்களுக்கு பதிவெண் வழங்கப்படும்.
கல்வித் தகுதியை பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் பதிவு செய்த பிறது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று தங்கள் முன்னுரிமையை பதிவு செய்யலாம்.
இந்த புதிய திட்டத்தால் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை வாங்கிய கையோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குவிவது தவிர்க்கப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications