தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.3 லட்சம் நவீன கருவிகள் கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறையை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயக்க கூடிய இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர நூற்றுக்கனக்கானோர் உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி மருத்துவமனை என்டோஸ்கோப்பிக் சர்ஜிக்கல் ரூமை உடைத்து உள்ளை புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த நவீன கருவியான புரோப் என்ற கருவியை எடுத்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாகும்.
மேலும் அந்த அறையி்ல் இருந்த ரூ.1 லட்சத்து 25 மதிப்புள்ள எல்சிடி மானிட்டர், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெரின்கோஸ் கோப்பி, ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 3 பித்தளை நல்லிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட நவீன கருவிகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்னம் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
நவீன கருவிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஓத்துழைப்பு இல்லாமல் இந்த சம்பவம் நடந்திருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் நவீன கருவிகளை மருத்துவமனையின் அறையில் இருந்து கழற்றி செல்ல அந்த தொழிலில் சம்பந்தம் உடையவர்கள்தான் எளிதாக எடுத்து செல்ல முடியும் என்பதால் தூத்துக்குடி நகரத்தில் எஸ்க்ரே யூனிட் உள்ளிட்ட நிலையங்களை வைத்துள்ள நபர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications