ஸ்பெக்ட்ரம் ஊழல்-எஸ்ஸார் சிஇஓவிடம் சிபிஐ விசாரணை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எஸ்ஸார் குழும தலைமை செயலதிகாரி பிரஷாந்த் ரூயாவிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவிருப்பது இது 2வது முறையாகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்ந்து பலரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரூயாவிடம் 2வது முறையாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
தற்போதைய விசாரணையின்போது எஸ்ஸார் நிறுவனத்துக்கும், லூப் டெலிகாமுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கேட்கப்படவுள்ளது.
இந்திய சட்டத் திட்டப்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இன்னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் இருக்கக் கூடாது. ஆனால் இந்த விதிமுறையை மீறி நடந்துள்ளது. வோடோபோன் நிறுவனத்தின் செல் போன் சேவைக்காக கூட்டு சேர்ந்துள்ள எஸ்ஸார் நிறுவனம், லூப் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வைத்துள்ளது.
ஆனால் 2ஜி உரிமம் பெற்ற சமயத்தில் தங்களுக்கு லூப் டெலிகாம் நிறுவனத்தில் வெறும் 2.15 சதவீத பங்குகளே இருந்ததாகவும், பின்னர் இது 1.5 சதவீதமாக குறைந்ததாகவும் கூறுகிறது எஸ்ஸார்.
ராசா தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் லூப் டெலிகாம் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications