இன்று முதல் ஜூன் 3 வரை பி.எட். விண்ணப்ப வினியோகம்
மதுரை: இந்த கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (18-ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.
இது குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
2011-12ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் உதவி பெறாத தனியார், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாதார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம் மற்றும் தெலுங்கு வாயிலாக ஆசிரியர் கல்வி பட்டய படிப்பில், ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இந்த இயக்ககத்தால் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் இந்த விண்ணப்பங்கள் இன்று முதல் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இவை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யபப்ட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி மாலை 5 மணிக்குள்
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சமர்பிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications